இரானைத் தாக்க ஆயிரம் ஏவுகணைகள் தயார்.. – டிரம்ப்

தன்னை படுகொலை செய்ய ஈரான் சதி செய்வதாகக் கிடைத்த தகவல்களைத் தொடர்ந்து, அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானுக்கு எதிராகத் தாக்குதல் நடத்துவதற்காக 1,000 ஏவுகணைகள் ஏற்கனவே தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான தேவையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் தனக்கு ஏதேனும் தீங்கு விளைவிக்க முயன்றால், அந்த நாட்டை முற்றிலுமாக அழிப்பதற்கு அமெரிக்க ராணுவம் தயாராக உள்ளது என்பதை அவர் மேலும் வலியுறுத்தினார்.
“அவர்கள் என்னைப் படுகொலை செய்ய முயல்கிறார்கள் என்பதை நான் அறிவேன். நான் அவர்களின் பட்டியலின் முதலிடத்தில் இருக்கிறேன். ஆனால் எனக்கு ஏதேனும் நேர்ந்தால், அவர்கள் இதுவரை கண்டிராத வகையிலான கடுமையான பதிலடியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்” என்று டிரம்ப் கூறியுள்ளார்.
இந்தப் பதிலடி நடவடிக்கை ஒரு வருடம் அல்லது அதற்கும் மேலாக நீடிக்கலாம் என்றும், ஈரானுக்கு எதிராக அழிவுகரமான தாக்குதல்களைத் தொடுக்க அமெரிக்க ராணுவம் எந்த நேரத்திலும் தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஈரானிடமிருந்து வரும் இந்த கொலை அச்சுறுத்தல்களை அடுத்து, அமெரிக்கப் பாதுகாப்புப் பிரிவினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



