News

எமது ஒன்றிணைவு இனவாத அடிப்படையிலான ஒன்றிணைவு என என விமர்சித்து வருகிறார்கள்… இது பெரும்பான்மைச் சமூகத்திற்கு எதிரானதோ அல்லது திட்டமிட்டு யாரையும் எதிர்க்கும் நோக்கம் கொண்டதோ அல்ல என்று தெளிவுபடுத்துக்கிறேன் ; ரவூப் ஹக்கீம்

மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து ஆறு தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து இன்று (13) விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தனர்.

இந்த விசேட ஊடக சந்திப்பானது கொழும்பில் உள்ள தனியார் விருந்தகம் ஒன்றில் இன்று (13) பிற்பகல் இடம்பெற்றிருந்தது.

இதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகியவற்றின் தலைவர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது மாகாணசபை தேர்தலை விரைவில் நடத்துவது, புதிய அரசியலமைப்பு மற்றும் காணி விவகாரம் உள்ளிட்ட முக்கிய மூன்று கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

இதில் உரையாற்றிய முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்,  இந்த ஒன்றிணைவைச் சிலர் குறுகிய நோக்கில் இனவாத அடிப்படையிலான ஒன்றாகக் காட்ட முயல்கிறார்கள். ஆனால், இது எந்தவொரு பெரும்பான்மைச் சமூகத்திற்கும் எதிரானதோ அல்லது திட்டமிட்டு யாரையும் எதிர்க்கும் நோக்கம் கொண்டதோ அல்ல என்று தெளிவு படுத்துகிறோம்,

மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையில், அனைவரும் உடன்படக்கூடிய ஒரு பொதுவான நிகழ்ச்சி நிரலை (Agenda) உருவாக்கி அதன் வழியே இணைந்து செயல்பட இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் தமிழ் பேசும் மக்களான இலங்கைத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள் மற்றும் முஸ்லிம் மக்களின் உரிமைகளையும், அவர்களுக்குள்ள பிரத்தியேகமான பிரச்சினைகளையும் ஒரு பரந்த கட்டமைப்புக்குள் நின்று கையாள்வதே இதன் நோக்கமாகும்

இந்தக் கூட்டமைப்பு பின்வரும் முக்கிய ஜனநாயகம் சார்ந்த விஷயங்களை முன்னிறுத்திச் செயல்படும் என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது:
சட்டத்தின் ஆட்சி (Rule of Law)
நாட்டின் இறையாண்மை (Sovereignty)
மனித உரிமைகள் (Human Rights) மற்றும் ஜனநாயகம் (Democracy) பாதுகாப்பு
சுருக்கமாகக் கூறின், இந்த ஒன்றிணைவு ஒரு குறுகிய இனவாத முயற்சி அல்ல என்றும், நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்புக்குள்ளேயே சிறுபான்மை மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான ஒரு கூட்டு முயற்சி என்றும் இந்த ஊடக சந்திப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button