News
மேலதிக பரிசோதனைகளுக்காக தேசிய கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் ஷிராந்தி ராஜபக்ஷ

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஷிராந்தி ராஜபக்ஷ இன்று (09) தேசிய கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
கண் பாதிப்பு காரணமாக நேற்று (08) அவர் சிறைச்சாலை நிபுணர் மருத்துவரிடம் அழைத்து செல்லப்பட்டார்.
இதன்போது வழங்கப்பட்ட மருத்துவப் பரிந்துரைகளின் அடிப்படையில், மேலதிக மருத்துவப் பரிசோதனைகளுக்காக அவரை தேசிய கண் மருத்துவமனை நிபுணரிடம் அனுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது



