News

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உணவக உரிமையாளர்  உயிரிழப்பு , அவரது மனைவி படுகாயம் #களுத்துறை

களுத்துறை, நாகொடை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உணவக உரிமையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது மனைவி காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களுத்துறை தெற்கு தலைமையக பொலிஸார் தெரிவிக்கையில், மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இரு துப்பாக்கிதாரிகள்  துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவித்தனர்.


மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில், இத்தாக்குதலுக்கு T-56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.


பலியான நபருக்கு 54 வயதென்றும், காயமடைந்த அவரது மனைவிக்கும் 52 வயதென்றும் பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் தொடங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதியரென  (அறிவிக்கப்படுகிறது.


துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை வெளிவரவில்லை என்பதுடன், இச்சம்பவம் தொடர்பாக களுத்துறை குற்றப்பிரிவு, கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு, குற்றவியல் சம்பவ இடப் பரிசோதனைக்கூட அதிகாரிகள் மற்றும் களுத்துறை தெற்கு தலைமையக பொலிஸார் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button