News
NPP கட்டுப்பாட்டில் உள்ள நீர்கொழும்பு மாநகர சபையின் முதல்வர் இராஜினாமா

தேசிய மக்கள் சக்தியின் (NPP) அதிகாரத்தைக் கொண்ட நீர்கொழும்பு மாநகர சபையின் முதல்வர் ரொபர்ட் ஹீன்கெந்தா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சொந்தக் காரணங்களுக்காகவே அவர் தனது பதவியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னரும் பல சந்தர்ப்பங்களில் ரொபர்ட் ஹீன்கெந்தா முதல்வர் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்திருந்தாலும், பின்னர் அந்த முடிவை மாற்றிக்கொண்டார்.
இருப்பினும், இன்று (15) அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.



