News

“அனுர ஜனாதிபதி ஆகியிருக்காவிட்டால் நாடு இதைவிட மோசமான நிலைக்குச் சென்றிருக்கும்..” – மதப்போதகர் ஜெரோம் பெர்னாண்டோ

தற்போதைய ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் ஆட்சி இல்லாதிருந்திருந்தால், இலங்கை இதைவிட மிகவும் பாரதூரமான நிலைக்குத் தள்ளப்படுவது நிச்சயம் என்று போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மிராக்கிள் டோம் (Miracle Dome) தேவாலயத்தில் நடைபெற்ற வழிபாட்டின் போது தனது ஆதரவாளர்களிடம் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் செயல்பாடுகளை கிரிக்கெட் விளையாட்டுடன் ஒப்பிட்டுக் கூறிய போதகர், ஜனாதிபதி தனது கடமைகளை மிகவும் நேரடியாகவும் நேர்மையாகவும் செய்து வருவதாகக் குறிப்பிட்டார்.

“உங்களது ஜனாதிபதி பந்தை நேரடியாக எதிர்கொள்கிறார் (Straight ஆக விளையாடுகிறார்). அவரது பாணி உங்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம், ஆனால் அவர் மிகவும் நேரடியான ஒரு நபர்,” என்று அவர் அங்கு தெரிவித்தார்.

அரசியல் நமது தனிப்பட்ட வாழ்க்கையை மோசமாகப் பாதிக்காமல் இருக்க வேண்டுமானால், அரசியல்வாதிகளுக்காக நாம் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றும் அவர் இங்கு வலியுறுத்தினார்.

உலக அரசியலில் நிலவும் மோதல் சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், சாதாரண மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையை அமைதியான முறையில் முன்னெடுத்துச் செல்ல முடிவது அவசியம் எனச் சுட்டிக்காட்டிய போதகர், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் மோதல்களை உதாரணமாகக் கூறி, இவ்வாறான அரசியல் நெருக்கடிகளுக்குள் சிக்காமல் சாதாரண மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான வாய்ப்பு இருக்க வேண்டும் என்றார்.

தற்போதைய ஜனாதிபதியின் தலையீடு இல்லாதிருந்திருந்தால், நாட்டின் நிலைமை இதைவிடப் பல மடங்கு மோசமடைந்திருக்கக்கூடும் என்பதைத் தம்மால் உறுதியாகக் கூற முடியும் என்றும் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.

Recent Articles

Back to top button