News

விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த முப்பது கிலோ மூக்குத்தூள் சிக்கியது – ஒருவர் கைது

இலங்கை கடற்படையினர் பொலிஸாருடன் இணைந்து கல்முனைப் பகுதியில் 2026 ஜூலை 19ஆம் திகதி மேற்கொண்ட விசேட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் வசம் வைக்கப்பட்டிருந்த ‘மூக்குத்தூள்’ எனப்படும் போதைப்பொருள் தொகுதியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தென்கிழக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பல் தீகாயு நிறுவனமும், கல்முனை பொலிஸாரும் இணைந்து இப்பகுதியில் மேற்கொண்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியில் உள்ள சந்தேகத்திற்கிடமான கடையொன்றும் வீடொன்றும் சோதனையிடப்பட்டன.

இதன்போது, சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த முப்பது (30) கிலோகிராமிற்கும் அதிகமான ‘மூக்குத்தூள்’ போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுச் சட்டத்தின் பிடியில் ஒப்படைக்கப்பட்டார்.

மேலும், இந்த கூட்டு நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கல்முனைப் பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகச் சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகுதியும் கல்முனைப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button