News

இஸ்ரேலின் பிரதமர் நெதன்யாகு உள்ளிட்ட தலைவர்களுக்கு எதிராகப் பிடியாணை கோரிய (சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை) முதல் சட்டத்தரணி கரீம் கான் பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பாட்டு பதவி நீக்கம்


சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை சட்டத்தரணியாக பணியாற்றி வந்த பிரிட்டனைச் சேர்ந்த கரீம் கான் (56), பாலியல் குற்றச்சாட்டுகள் காரணமாக உத்தியோகபூர்வமாகப் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்



கடந்த இரண்டு ஆண்டுகளாக இது தொடர்பாக நடைபெற்று வந்த விசாரணையின் முடிவில், நடைபெற்ற வாக்கெடுப்பு மூலம் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது



தன்னுடன் பணியாற்றிய பெண் உதவியாளரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும், அவர் முறைப்பாடு அளிப்பதைத் தடுக்க முயற்சி செய்ததாகவும் கரீம் கான் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.



சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வரலாற்றிலேயே தலைமை சட்டத்தரணி ஒருவர் பதவிநீக்கம் செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.



தன் மீதான இந்தக் குற்றச்சாட்டுகளை கரீம் கான் தொடர்ந்து மறுத்து வருகின்றார்.



அத்துடன், மேற்குநாடான இஸ்ரேலின் பிரதமர் நெதன்யாகு உள்ளிட்ட தலைவர்களுக்கு எதிராகப் பிடியாணை கோரிய முதல் சட்டத்தரணி கரீம் கான் என்பதுடன், இவரது பதவிநீக்கத்தால் இஸ்ரேல் தலைவர்களுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையோ அல்லது அது தொடர்பான வழக்குகளோ இரத்து ஆகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும், இந்த பிடியாணையைத் திரும்பப் பெறும் அதிகாரம் ஐ.சி.சி நீதிபதிகளுக்கு மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button