News

நாங்கள் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றி வருகிறோம்…

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் அனைத்து அமைச்சுகளும் தங்களது பணிகளை வெற்றிகரமாக முன்னெடுத்து வருவதாக முன்னாள் சபாநாயகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ள அவர், தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்கள் அமைச்சுப் பணிகளை முன்னெடுக்கும் போது ஜனநாயகக் கொள்கைகளை மதித்து, மக்களுக்குச் சேவை செய்வதற்கு முன்னுரிமை அளித்துச் செயற்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சமீபகாலமாகப் பெரிதும் பேசப்பட்ட நீதிபதிகளின் பதவிக் காலம் தொடர்பான விடயம் குறித்துப் கருத்துத் தெரிவித்த அசோக ரன்வல, இவ்வாறான உணர்வுப்பூர்வமான மற்றும் தீர்க்கமான விடயங்களில் தீர்மானம் எடுக்கும் போது அரசாங்கம் மிகவும் வெளிப்படைத்தன்மையுடனும் ஜனநாயக ரீதியாகவும் செயற்படுவதாக வலியுறுத்தினார்.

அரசாங்கத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும் மக்களின் நலனுக்காகவும் ஜனநாயகக் கட்டமைப்பைப் பாதுகாப்பதற்காகவுமே எடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Recent Articles

Back to top button