பொது மகன் ஒருவரின் மோட்டார் சைக்கிள் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டதற்காக பொருத்தமற்ற வகையில் நடந்துகொண்டு பேயாட்டம் ஆடிய பொலிஸ் அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்
கடமைக்கு பொருத்தமற்ற வகையில் நடந்துகொண்டு, பொதுமக்களுடன் அச்சுறுத்தும் தொனியில் தர்க்கத்தில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரி ஒருவரின் காணொளி கடந்த நாட்களில் சமூக வலைத்தளங்களில் பரவியது. இச்சம்பவத்துடன் தொடர்புடைய உப பொலிஸ் பரிசோதகரின் பணி இடைநீக்கம் செய்ய தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வத்துபிட்டிவல முதலீட்டு மண்டல பொலிஸ் சாவடியில் கடமையாற்றி வந்த இந்த உப பொலிஸ் பரிசோதகர் கடந்த 23 ஆம் திகதி வத்துபிட்டிவல வைத்தியசாலைக்கு அருகில் உள்ள தனியார் நிறுவனமொன்றிற்கு முன்பாக சீருடையில் கடமைக்கு …
கடமைக்கு பொருத்தமற்ற வகையில் நடந்துகொண்டு, பொதுமக்களுடன் அச்சுறுத்தும் தொனியில் தர்க்கத்தில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரி ஒருவரின் காணொளி கடந்த நாட்களில் சமூக வலைத்தளங்களில் பரவியது.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய உப பொலிஸ் பரிசோதகரின் பணி இடைநீக்கம் செய்ய தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வத்துபிட்டிவல முதலீட்டு மண்டல பொலிஸ் சாவடியில் கடமையாற்றி வந்த இந்த உப பொலிஸ் பரிசோதகர் கடந்த 23 ஆம் திகதி வத்துபிட்டிவல வைத்தியசாலைக்கு அருகில் உள்ள தனியார் நிறுவனமொன்றிற்கு முன்பாக சீருடையில் கடமைக்கு பொருத்தமற்ற வகையில் நடந்துகொண்டு பொதுமக்களுடன் அச்சுறுத்தும் தொனியில் தர்க்கத்தில் ஈடுபட்ட சம்பவம் சமூக வலைத்தளங்கள் வாயிலாக பதிவு செய்யப்பட்டது. Video > https://www.facebook.com/share/v/19Kcxrn842/



