1,025 வாகனங்களை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இறக்குமதி செய்து அவற்றுக்கு வரி மற்றும் கட்டணங்களை செலுத்தி விடுவிக்காமல் துறைமுகத்திலேயே மாதக்கணக்கில் வைத்துள்ள இறக்குமதியாளர்கள்
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் உள்ள சுமார் 1,025 இறக்குமதி வாகனங்களை இதுவரை இறக்குமதியாளர்கள் விடுவித்துக் கொள்ளவில்லை என இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.இலங்கை சுங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவிக்கையில், அவற்றில் 625 வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு ஆறு மாதங்களுக்கும் மேலாகியுள்ளதுடன், அவற்றுக்கு எதிராக எந்தவித சுங்கக் குற்றங்களும் பதிவாகவில்லை என்றார்.சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 129ஆவது பிரிவின் கீழ், உரிய காலத்திற்குள் விடுவிக்கப்படாத வாகனங்களை ஏலம் விடவோ அல்லது டெண்டர் கோரி விற்பனை செய்யவோ எதிர்காலத்தில் நடவடிக்கை …
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் உள்ள சுமார் 1,025 இறக்குமதி வாகனங்களை இதுவரை இறக்குமதியாளர்கள் விடுவித்துக் கொள்ளவில்லை என இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை சுங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவிக்கையில், அவற்றில் 625 வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு ஆறு மாதங்களுக்கும் மேலாகியுள்ளதுடன், அவற்றுக்கு எதிராக எந்தவித சுங்கக் குற்றங்களும் பதிவாகவில்லை என்றார்.
சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 129ஆவது பிரிவின் கீழ், உரிய காலத்திற்குள் விடுவிக்கப்படாத வாகனங்களை ஏலம் விடவோ அல்லது டெண்டர் கோரி விற்பனை செய்யவோ எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் எந்தவொரு பொருளையும் ஒரு மாதத்திற்குள் உரிய வரிகளைச் செலுத்தி விடுவித்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், அந்தப் பொருட்களை விற்பனை செய்து அரசுக்குச் செலுத்த வேண்டிய வரித் தொகை அறவிடுவதற்கான சட்ட ஏற்பாடுகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விற்பனையின் பின்னர் கிடைக்கும் தொகையில் இருந்து துறைமுக மற்றும் களஞ்சியக் கட்டணங்களும் செலுத்தப்படும். அதன்பின்னரும் தொகை எஞ்சியிருந்தால், அது சம்பந்தப்பட்ட இறக்குமதியாளருக்கு வழங்கப்படும் என சுங்கம் தெரிவித்துள்ளது.
எனினும், நியாயமான காரணங்களால் வாகனங்களை விடுவித்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் அறிவித்தால், அவை தொடர்பில் பரிசீலனை செய்யப்படும் என்றும் இலங்கை சுங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்



