ஈரான்- அமெரிக்கா இடையே நீடித்து வந்த போர் முடிவுக்கு வந்தது.. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி திரும்பியது

கடந்த 13 நாட்களாக ஈரான் மீது அமெரிக்கா இடையே நீடித்து வந்த போர் தற்காலிகமாக முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, பதற்றம் நிறைந்த மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது அமைதி திரும்பியுள்ளது.
தற்போது இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, ஈரான் மீதான தனது தாக்குதல்களை அமெரிக்கா நிறுத்தியுள்ளது.
அதேபோல், அமெரிக்கப் படைத்தளங்கள் மீதான தாக்குதல்களை ஈரானும் கைவிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட போதிலும், ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்ற சரக்குக் கப்பல்கள் மீது ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்குக் காரசாரமான பதிலடி கொடுக்கும் வகையில், கடந்த 12ஆம் திகதி முதல் ஈரான் மீது அமெரிக்கா தொடர் தாக்குதல்களைத் ஆரம்பித்தது.
இரு தரப்பிற்கும் இடையே கடந்த 13 நாட்களாக நீடித்து வந்த தீவிர மோதலில், அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு ஈரானும் அமெரிக்கப் படைத்தளங்களைக் குறிவைத்து பதிலடி கொடுத்துள்ளமைக் குறிப்பிடத்தக்க



