News
இ. போ. ச பஸ்ஸும்- தனியார் பஸ்ஸும் நேருக்கு நேர் மோதி விபத்து 20 பேர் காயம் #கேகாலை
கேகாலை – கரடுபன பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸும் தனியார் பஸ்ஸும் நேருக்கு நேர் மோதி இன்று (03) காலை இடம்பெற்ற விபத்தில் சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று காலை 6:15 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கண்டி நோக்கிப் பயணித்த இ.போ.ச. பஸ்ஸும், திகனையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பஸ்ஸுமே இவ்வாறு ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
காயமடைந்த பயணிகள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு கேகாலை போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் கேகாலை பொலிஸார் வழக்குப் பதிவு செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


