News
கொழும்பில் வீதியில் சென்ற ஒருவரின் தொலைபேசியைப் பறித்துச் சென்ற வெளிநாட்டவர் துரத்திப்பிடிப்பு

கொழும்பு, கொம்பனி வீதி (கால்பேட்டி) சந்திப் பகுதியில் தொலைபேசியைப் பறித்த குற்றச்சாட்டின் பேரில் வெளிநாட்டவர் ஒருவர் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.
பொதுமக்களும் பொலிஸ் அதிகாரிகளும் சூழ்ந்திருக்க, அந்த நபர் நிற்கும் காட்சிகள் காணொளியில் பதிவாகியுள்ளன.
பாதசாரி ஒருவரின் தொலைபேசியைப் பறித்துச் சென்ற சந்தேகநபர், அங்கிருந்து தப்பியோட முயன்றதாக நேரில் கண்ட சாட்சி ஒருவர் தெரிவித்தார்.
இருப்பினும், உள்ளூர் வாசி ஒருவரால் அவர் துரத்திப் பிடிக்கப்பட்டு, பின்னர் பொலி யாரிடம் ஒப்படைக்கப்பட்டார்



