News

Video > கொரோனா காலத்தில் இந்நாட்டு மக்களின் உயிர்களைக் காப்பாற்ற, கோட்டாபய ராஜபக்ஷவின் குழுவினால் எடுக்கப்பட்ட சில தீர்மானங்கள் (ஜனாஸா எரிப்பு)  குறித்து நாட்டில் வாழும் முஸ்லிம் மக்களிடம் தவறான எண்ணம் உள்ளது

ராஜபக்ஷக்களைத் திட்டிக் கொண்டு காலத்தைக் கழிப்பதால்  பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப்போவதில்லை.
நாங்கள் எப்போதும் இந்நாட்டு மக்களை சமூகப் பேரழிவுகளிலிருந்து காப்பாற்றச் செயற்பட்டவர்கள் என நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

Video > https://www.facebook.com/share/v/1N9CeyoPHf/


நாங்கள் எல்.டீ.டீ.ஈ பயங்கரவாதத்திலிருந்து, இந்நாட்டின் சமூகப் பேரழிவிலிருந்து மக்களைக் காப்பாற்ற, பயங்கரவாதத்திலிருந்து மீட்க, கொவிட்-19 தொற்றுநோய் பரவிய காலத்தில் உலகின் சில நாடுகள் அந்நாடுகளைத் திறந்துவிட்டு, ‘எத்தனை பேர் செத்தாலும் பரவாயில்லை, உயிர்கள் போனாலும் பிரச்சினையில்லை, எத்தனை பேர் வேண்டுமானாலும் சாகட்டும், அரசாங்கம் இதிலிருந்து தப்பித்துக் கொள்ளட்டும், இது உலகளாவிய தொற்றுநோய்’ என்று கூறி நாங்கள் ஒதுங்கிவிடவில்லை.


குறைந்தளவிலான உயிரிழப்புகளுடன் இந்நாட்டு மக்களின் உயிர்களைக் காப்பாற்ற நாங்கள் செயற்பட்டோம்.
நாட்டில் வாழ்ந்த முஸ்லிம் மக்கள், கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் குழுவினால் எடுக்கப்பட்ட சில தீர்மானங்கள் குறித்து தவறான அபிப்பிராயமும் உருவானது. இன்றும் அந்த மனவேதனை எங்கள் மீது இருக்கிறது.


அந்த அனைத்துக் காரியங்களையும் நாங்கள் செய்தது இந்நாட்டின் சமூகப் பேரழிவிலிருந்து மக்களைக் காப்பாற்றவே.
போராட்டம் வந்தது. நாங்கள் போராட்டத்தை எதிர்கொண்டதும் அப்படித்தான்.

நாங்கள் போராட்டத்தை எதிர்கொண்டதும் இந்நாட்டு மக்களை சமூகப் பேரழிவிலிருந்து காப்பாற்றவே.
எமக்கும் இராணுவம், பொலிஸாரைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கானோரைக் கொலை செய்து அரசாங்கத்தைப் பாதுகாக்க முயற்சித்திருக்க முடியும். இல்லை, நாங்கள் அவ்வாறு செய்திருந்தால் இன்று நாமல் ராஜபக்ஷ இங்கு நிற்கும் நிலை கூட இல்லாமல் போயிருக்கலாம்.

நாங்கள் யதார்த்தத்தை எதிர்கொண்டோம். ஆனால், யதார்த்தத்தை எதிர்கொண்டு மக்களின் பக்கம் நின்று, சமூகப் பேரழிவிலிருந்து நாட்டின் இளைஞர்களைக் காப்பாற்ற நாங்கள் பின்வாங்கியதை பலவீனம் என்று அரசாங்கமும், அரசாங்கத்துடன் தொடர்புடையவர்களும் நினைத்தால், அவர்களுக்குத் தவறாகிவிட்டது என்பதையும் நினைவூட்ட வேண்டும் என நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button