News

நாமலின் பொதுஜன பெரமுன முன்னாள் அமைப்பாளர் உள்ளிட்ட குழுவினர் பிரிந்து சென்று திலித் ஜயரத்னவின் சர்வஜன பலய கட்சியுடன் இணைந்தனர்

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள் குழுவொன்று சர்வஜன அதிகாரத்துடன் இணைந்துள்ளது.


சர்வஜன அதிகாரத்தின் தேசிய அமைப்பாளர் திலும் அமுனுகமவுடன் இக்குழுவினர் இன்று (09) நாவலப்பிட்டியிலுள்ள தனியார் மண்டபம் ஒன்றில் விசேட சந்திப்பொன்றை நடத்தினார்கள்.



கலந்துரையாடலின் பின்னர் கருத்துத் தெரிவித்த கே.எல்.ஏ. குணசிங்க, தானும் தனது குழுவினரும் ‘சர்வஜன அதிகாரத்துடன் உத்தியோகபூர்வமாக இணைந்து செயல்படவுள்ளதாகத் தெரிவித்தார்.



இக்குழுவினரின் இணைப்பைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த திலும் அமுனுகம, சிறைச்சாலைகளில் ஏற்படும் மோதல்களுக்கு எதிர்க்கட்சியே நேரடியாகக் காரணம் எனச் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில், அவ்வாறாயின் நாட்டிற்கு அரசாங்கம் ஒன்று தேவையில்லை எனக் குறிப்பிட்டார்.



இதேவேளை, மகாநாயக்க தேரர்களின் எதிர்ப்பு மத்தியிலும், நீதிபதிகளின் பதவிக் காலத்தை நீடிக்கும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டமையானது, தற்போதைய அரசாங்கத்தின் சர்வாதிகாரப் போக்கை தெளிவாக எடுத்துக்காட்டும் ஒரு சந்தர்ப்பமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


மேலும், அனைத்துக் கட்சிகளும் தற்போது அதிக வாக்கு வங்கியிலிருந்து குறைந்த வாக்கு வங்கிக்குச் சரிந்துள்ள போதிலும், சர்வஜன அதிகாரம் மட்டுமே பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கி தற்போது மிகவும் வலுவான ஒரு வாக்கு வங்கியை கட்டியெழுப்பியுள்ளது என்றும் திலும் அமுனுகம மேலும் தெரிவித்தார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button