News

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியை, 10 மாதங்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்த பின்னர், எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது

பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



விசாரணை முன்னேற்றம் குறித்த அறிக்கையைச் சமர்ப்பித்த கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் இஷாரா செவ்வந்தி இன்று(11) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.



இதன்போது, சமர்ப்பிக்கப்பட்ட உண்மைகளைக் பரிசீலித்த கொழும்பு நீதவான் நீதிமன்றம், சந்தேகநபரை ஆகஸ்ட் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button