இன்றிரவு கல்கிசையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான முழு விபரம்

கல்கிசையில் துப்பாக்கிச் சூடு: பலத்த காயமடைந்த நபர் உயிரிழப்பு
கொழும்பு:
கல்கிசை, ஹுளுதாகொட வீதிப் பகுதியில் இன்று (15) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பலத்த காயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இரு துப்பாக்கிச்சாரிகள் இத்தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கல்கிசை, ஹுலுதாகொட வீதியிலுள்ள வாகன பழுதுபார்க்கும் நிலையம் ஒன்றின் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் களுபோவில கற்பித்தல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையிலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இரு திட்டமிட்ட குற்றக் கும்பல்களுக்கு இடையே நிலவி வரும் தனிப்பட்ட பகைமையின் காரணமாகவே இந்த கொலை நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.



