News

பளை பகுதியில் இரகசிய பயிற்சி முகாம்.. LTTE முகாமோ என சந்தேகம்..

பளை பகுதியில் உள்ள ஒரு அரசுக்குச் சொந்தமான காப்புக்காட்டில் (reserve) சுமார் 49 ஏக்கர் நிலப்பரப்பைச் சுத்தம் செய்து, அங்கு இரகசிய பயிற்சி முகாம் ஒன்று நடத்தப்படுவதாகச் சந்தேகம் எழுந்துள்ளதாக சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழு (IC Human Rights Commission) தெரிவித்துள்ளது.

அந்த ஆணைக்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சங்கீத் டயசேகர, இது தொடர்பாக ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் பொதுப் பாதுகாப்பு அமைச்சருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

பளை பகுதியில் உள்ள குறித்த காப்புக்காட்டுக்குள், எவ்வித அரசு அனுமதியும் இன்றி மூன்று மாடி கட்டிடம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும், அங்கு 100 முதல் 150 பேர் வரையானவர்கள் வேலை செய்வதாகவும் அவர் வெளிப்படுத்தினார்.

இது ஒரு LTTE பயிற்சி முகாமோ அல்லது குண்டு தயாரிக்கும் இடமோ என்பதைக் குறித்து, அப்பகுதி மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே கடும் சந்தேகம் எழுந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தத் திட்டத்திற்குப் பின்னால் உயர்மட்ட அரசு அதிகாரிகள் சிலர் இருப்பதாகவும், இது வெளிநாட்டு நிதியுதவியுடன் நடைபெறும் திட்டமாக இருக்கலாம் என்றும் டயசேகர மேலும் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுத்த வனப் பாதுகாப்பு அதிகாரிக்கும் அவரது மனைவிக்கும் ஒரு குழுவினால் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் பாதுகாப்பிற்காக உடனடியாக அவர்களை குருநாகல் பகுதிக்கு இடமாற்றம் செய்யுமாறும் அவர் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தார்.

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த, இந்த இடம் குறித்து உடனடியாக முறையான விசாரணைகளை நடத்துமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Recent Articles

Back to top button