News

2029ஆம் ஆண்டு  ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்ஷ சிறையில் இருந்தே போட்டியிட வேண்டும் என அமைச்சர் ஒருவர் கூறியதற்கு நாமல் கடும் கண்டனம் தெரிவிப்பு

2029ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், தாம் சிறையில் இருந்தே போட்டியிட வேண்டும் என அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.



நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.



நாட்டில் தற்போது அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்களே வழக்குகளுக்குத் தீர்ப்புகளை வழங்குவது போன்று செயற்படுவதாகவும், நீதிமன்ற நீதிபதிகள் அல்லாமல் அரசியல்வாதிகள் நீதித்துறை தொடர்பான விடயங்களில் தலையிடுவதாகவும் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.



இதன் மூலம் நீதித்துறைக்கு அரசாங்கம் எவ்வளவு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கின்றது என்பது தெளிவாகத் தெரிவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



நீதித்துறையின் சுயாதீனத்தன்மை தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கங்களும் சந்தேகம் எழுப்பியுள்ளதாகத் தெரிவித்த நாமல், இதன் காரணமாகவே சர்வதேச சட்டத்தரணிகள் அமைப்புகளும் நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வருவதாகக் கூறியுள்ளார்.



“நாங்கள் நீதிமன்றத்தையே நம்புகிறோம்” எனவும் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button