News

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்களின் சமூக, பொருளாதார, அபிவிருத்தி பிரச்சினைகள் தொடர்பில் சஜித் தலைமையில் தமிழ் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடல்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துப் கலந்துரையாடினார். 


வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்களின் சமூக, பொருளாதார, அபிவிருத்தி மற்றும் ஏனைய பிராந்தியப் பிரச்சினைகள் உள்ளிட்ட அவர்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் பல்வேறு விடயங்கள் குறித்து இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது. 

மேலும், இந்தப் பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் விரிவாக முன்வைப்பது குறித்தும், தேவையான தலையீடுகளை மேற்கொள்வது குறித்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடினர். 
இந்நிகழ்வில் எம்.எல்.எம். ஹிஸ்புல்லா, ரவூப் ஹக்கீம், இராமநாதன் அர்ச்சுனா, காதர் மஸ்தான், சாணக்கியன் இராசமாணிக்கம், மனோ கணேசன் உள்ளிட்ட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். 

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button