News

எளிமையான ஜனாதிபதி நாடு பூராகவும் கூட்டம் நடத்த செலவிடும் பணத்தை மக்கள் நலன் திட்டங்களுக்கு செலவிடலாமே !

எளிமையான ஜனாதிபதி நாடு பூராகவும் கூட்டம் நடத்த செலவிடும் பணத்தை மக்கள் நலன் திட்டங்களுக்கு செலவிட்டால் அதனூடாக மக்கள் பலனடைவார்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மொஹமட் பாபிfக் குறிப்பிட்டார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

பாராளுமன்றத்தில் 2/3 பலத்தை வைத்துள்ள ஒருவர் தேர்தல் அல்லாத காலத்தில் மக்களை அழைத்து மேடை போட்டு கூட்டம் நடத்துவது அரசின் வீழ்ச்சியையே காட்டுகிறது.

இன்று வாழ்க்கைச்செலவு விண்ணை முட்டியுள்ளது. விலைவாசி கட்டுக்கடங்காமல் செல்கிறது.மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுத்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் அதிகாரத்தை தன் கையில் வைத்துள்ளவர்கள் தங்கள் பொண்ணான நேரத்தை மக்களை முன்னேற்றும் நலத்திட்டம்க்களுக்கு செலவிடுவதை விட்டு விட்டு மக்கள் ஆதரவை திரட்ட கூட்டம் நடத்த புறப்பட்டுள்ளமை கேளிக்கூத்தான விடயமாகும்.

இன்று நாட்டில் ஜனாதிபதி , பாராளுமன்றம் , உள்ளூராட்சி சபைகள் என அனைத்து அதிகாரங்களையும் வழங்கியுள்ள நிலையில் ஆட்சிக்கு வந்து கதை கூறிக்கொண்டு காலத்தை கடத்தும் இந்த அரசு நாட்டை முன்னேற்ற இன்னும் என்ன அதிகாரத்தை எதிர்ப்பார்க்கிறது என்று நாம் கேட்கிறோம். உங்களுக்கு மக்கள் ஆதரவு இருக்குமானால் ஏன் கோடிக்கணக்கான பணத்தை விரயம் செய்து கூட்டம் நடத்துகிறீத்கள் என நாம் அரசிடம் கேட்கிறோம்.

எளிமையான ஜனாதிபதி என தன்னை காட்டிக்கொள்ளும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக தேர்தல் அல்லாத ஒரு காலத்தில் மக்கள் சந்திப்பு என்ற பெயரில் கோடிக்கணக்கான கட்சி நிதியை விரயம் செய்ய புறப்பட்டுள்ளமை கவலையளிக்கிறது.

வீண்விரயம் செய்ய திட்டமிட்டுள்ள இந்த நிதியை மக்கள் நலன்களுக்காக செலவிட்டால் மக்கள் அதனை வரவேற்பார்கள் என ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மொஹமட் பாபிfக் குறிப்பிட்டார். குறிப்பிட்டார்.

Recent Articles

Back to top button