News
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மகன் நாமல் ராஜபக்ஷவை பார்க்க தந்தை மகிந்த ராஜபக்ஷ சிறைச்சாலைக்கு விஜயம்

இலஞ்சக் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு, செப்டம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை பார்வையிடுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சிறைச்சாலைக்கு சென்றுள்ளார்.
இலங்கை விமான நிறுவனத்தின் விமானக் கொள்வனவு தொடர்பான இலஞ்சக் குற்றச்சாட்டு விசாரணையின் அடிப்படையில் நாமல் ராஜபக்ஷ கடந்த 4ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவரை செப்டம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது



