News

தலைவர் ராஜினாமா.. புதிய தலைவர் முன்னாள் மொட்டு (பொஹொட்டுவ) பிரபல உறுப்பினர் ..?

மத்திய பிராந்திய பொருளாதார அபிவிருத்தி முகவர் நிலையத்தின் (REDA) தலைவராகப் பணியாற்றிய திரு. ஆனந்த ஸ்டீவன், தனிப்பட்ட காரணங்களினால் தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் (NPP) அரசாங்கத்தினால் இப்பதவிக்கு நியமிக்கப்பட்ட இவர், தனது ராஜினாமா கடிதத்தை மத்திய மாகாண ஆளுநர் விசேட வைத்திய நிபுணர் ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோவிடம் கையளித்துள்ளார்.

இதற்கிடையில், காலியாகியுள்ள இப்பதவிக்கு முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் எரிக் வீரவர்தன நியமிக்கப்படலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு எரிக் வீரவர்தன தீவிரப் பங்காற்றியதுடன், இதற்கு முன்னர் அவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (பொஹொட்டுவ) உறுப்பினராகவும் பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Articles

Back to top button