News

மக்களை இந்தளவுக்கு ஏமாற்றும் ஒருவர் நாட்டின் தலை தலைமைத்துவத்திற்கு தகுதியானவரா? சிறிய பொய்களாக இருந்தால் கூட பரவாயில்லை…

மக்களை இந்தளவுக்கு பகிரங்கமாக ஏமாற்றி, மிகப்பெரிய பொய்களைக் கூறிவரும் ஒரு நபர் நாட்டின் தலைமைத்துவத்திற்கு தகுதியானவரா என்று தாம் மக்களிடம் கேள்வி எழுப்புவதாக சமகி ஜன பலவேகயவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த சமிள பிரசாத் சிறிவர்தன, சிறிய பொய் கூறப்பட்டால் அதனையாவது நியாயப்படுத்த முடியும் எனவும், ஆனால் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க மேடைகளில் தொடர்ச்சியாகப் பேசுவது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான கருத்துக்களையே என்றும் கூறினார். மணித்தியாலக் கணக்கில் பேசி மக்களை ஏமாற்றுவது வெட்கக்கேடான ஒரு நிலைமை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நீர்த்தேக்கங்களை அமைத்தல் மற்றும் நீர் வளங்களை மேலாண்மை செய்தல் தொடர்பில் அனுர குமார திஸாநாயக்க வெளியிடும் கருத்துக்களை விமர்சித்த நாடாளுமன்ற உறுப்பினர், 2500 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டின் அரசர்களும், சுதந்திரத்திற்குப் பின் ஆட்சிக்கு வந்த தலைவர்களும் நீர் வளத்திற்கு முன்னுரிமை அளித்துச் செயற்பட்டுள்ளதாகவும், இது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு விடயம் அல்ல என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன், சாதாரண மக்கள் வாராந்தச் சந்தைக்குச் செல்லும் வழியில் வைத்தியசாலைகளுக்குச் சென்று மருந்துகளைப் பெற்றுக்கொள்வதை எள்ளி நகையாடுவதன் மூலம், அனுர திஸாநாயக்க ஏழை மக்களின் வாழ்க்கை முறையைக் கேலி செய்துள்ளதாக அவர் குற்றம் சுமத்தினார். சுகாதாரத் துறையில் நிலவும் உண்மையான வைத்தியர் வெற்றிடங்கள் குறித்து சரியான புரிதல் இன்றி, “ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு வைத்தியர் வழங்கித் தரப்படும்” என நிறைவேற்ற முடியாத போலி வாக்குறுதிகளை வழங்கி மக்களின் உணர்வுகளுடன் விளையாடுவதாகவும் அவர் கூறினார்.

மேலும், கடந்த இரண்டு வருடங்களில் வரிசை யுகத்தை முடிவுக்குக் கொண்டுவந்து பொருளாதாரத்தை ஒரு குறிப்பிட்ட ஸ்திரமான நிலைக்குக் கொண்டுவர ரணில் விக்ரமசிங்க எடுத்த நடவடிக்கைகளை அனுர குமார திஸாநாயக்க திட்டமிட்டே மறந்து அரசியல் லாபம் பெற முயல்வதாகவும், இதுபோன்ற ஏமாற்று வேலைகளுக்கு ஏமாற வேண்டாம் என்றும் சிறிவர்தன மேலும் கேட்டுக்கொண்டார்.

Recent Articles

Back to top button