News

இரண்டு வருடங்கள் இனவாதம் இல்லாத ஆட்சியாம் .. அப்போ கல்முனை வைத்தியசாலையில் நடந்தது பக்கவாதமா ?

இரண்டு வருடங்கள் இனவாதம் இல்லாத ஆட்சி நடப்பதாக கூறும் ஆளும் தரப்பிடம் கல்முனை வைத்தியசாலையில் நடந்தது பக்கவாதமா ? என கேட்க விரும்புவதாக பொதுஜன பெரமுன குண்டசாலை தேர்தல் தொகுதி அமைப்பாளர் ரிஷாத் மஃரூப் கேள்வி எழுப்பினார்.

கடந்த கோத்தாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதி காலத்திலும் , ரனில் விக்ரமசிங்க ஜனாதிபதி காலத்திலும் நாட்டில் எங்கேயும் இனமோதல்கள் இடம்பெறவில்லை என்பதை இனங்களுக்கு இடையே நேரடி மோதல்கள் இல்லாத ஆட்சி அனுர ஆட்சி என்று கூறுபவர்களிடம் நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

இனவாதம் இல்லாத இந்த ஆட்சியில் தான் வரலாற்றில் முஸ்லிம்கள் இல்லாத அமைச்சரவை, அரச குழுக்களில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படும் போக்கு உருவாகியுள்ளது.

குறிப்பாக கிளீன் ஶ்ரீ லங்கா, எல்லை மீள் நிர்ணயக்குழு, கல்வி சீர்திருத்த குழு என அனைத்திலும் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் கல்முனை வடக்கு வைத்தியசாலையில் ஹிஜாப் அணிந்து சென்ற முஸ்லிம் தாதியருக்கு நடந்தது இனவாதம் இல்லையென்றால் பக்கவாதமா என நாம் கேட்க விரும்புகிறோம். ஒரு சேர்குலரை மாற்றி அதற்கு தீர்வு கொடுக்காமல் கல்முனை அஷ்ரப் வைத்தியசாலைக்கு மாற்றம் செய்துள்ளமை நியாமானதா என நாம் கேட்கிறோம்.

கடந்த அரசில் முஸ்லிம் அமைச்சர்கள் என்ன செய்தார்கள் என்று கேட்காமல் அவர்கள் செய்யவில்லை என்றுதான் உங்களுக்கு மக்கள் வாக்களித்துள்ளார்கள்.இனவாதம் இல்லை என காலத்தை கடத்தாமல் இந்த அரசு முஸ்லிம்களை இந்த நாட்டு பிரஜைகளாக மதித்து நடத்த வேண்டும் என பொதுஜன பெரமுன குண்டசாலை தேர்தல் தொகுதி அமைப்பாளர் ரிஷாத் மஃரூப் குறிப்பிட்டார்.

Recent Articles

Back to top button