News

ஜூலை மாதம் 7.2 ஆக இருந்த நாட்டின் பணவீக்கம் ஆகஸ்டில் 8% ஐத் தாண்டியது..

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் 2026 ஆகஸ்ட் மாதத்திற்கான இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண் (NCPI) மற்றும் மாதாந்த நுகர்வோர் பணவீக்க விகிதத்தை வெளியிட்டுள்ளது.

அதன்படி, 2026 ஜூலை மாதத்தில் 7.2% ஆகப் பதிவாகியிருந்த நாட்டின் பணவீக்க விகிதம் 2026 ஆகஸ்ட் மாதத்தில் 8.1% ஆக உயர்வடைந்துள்ளது.

2026 ஜூலை மாதத்தில் 4.9% ஆகப் பதிவாகியிருந்த உணவுப் பிரிவின் புள்ளிக்கு புள்ளி பணவீக்க விகிதம், 2026 ஆகஸ்ட் மாதத்தில் 6.6% ஆக உயர்வடைந்துள்ளது.

அதேபோன்று, 2026 ஜூலை மாதத்தில் 9.2% ஆக இருந்த உணவு அல்லாத பிரிவின் புள்ளிக்கு புள்ளி பணவீக்க விகிதம், 2026 ஆகஸ்ட் மாதத்தில் 9.3% ஆக உயர்வடைந்துள்ளது.

Recent Articles

Back to top button