மாளிகாவாத்தை பகுதியில் காதல் விவகாரம் காரணமாக இரு குழுவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் முற்றியதில் முகம்மது அப்துல்லா (21) மற்றும் முகமது ரெய்ஹான் உயிரிழப்பு – மற்றொருவர் படுகாயம்

கொழும்பு 10, மாளிகாவாத்தை பகுதியில் நேற்று இரவு (29) இடம்பெற்ற மோதலில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்ததுடன், 16 வயது சிறுவன் ஒருவன் பலத்த காயமடைந்துள்ளார்.
மாளிகாவாத்தை பகுதியில் உள்ள ஆடை அங்காடி ஒன்றிற்கு அருகில் இரவு 10:30 மணியளவில் காதல் விவகாரம் தொடர்பில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கத்திக்குத்தாக மாறியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்த மோதலில் பலத்த காயமடைந்த மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் மாளிகாவாத்தையைச் சேர்ந்த முகம்மது அப்துல்லா (21) மற்றும் முகமது ரெய்ஹான் ஆகிய இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
காயமடைந்த 16 வயது சிறுவன் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அவசர சிகிச்சை பெற்று வருகிறான்.
தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்காக மாளிகாவாத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.



