News

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பில் தன்னைக் கைது செய்வதையோ அல்லது தடுத்து வைப்பதையோ தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் தன்னைக் கைது செய்வதையோ அல்லது தடுத்து வைப்பதையோ தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்திருந்த ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.



மனு தொடர்பான சமர்ப்பிப்புகளைப் பரிசீலித்த பின்னர், அதனை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே நிராகரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரொஹாந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் சரத் திஸாநாயக்க ஆகியோர் அடங்கிய இருவர் கொண்ட நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவைப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button