News

1983 கறுப்பு ஜூலை இன வன்முறைகளால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிடம் வருத்தம் தெரிவிக்கிறேன் – மன்னிப்பும் கோருகிறேன் ; சஜித்

1983 கறுப்பு ஜூலை இன வன்முறைகளால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிடம் வருத்தம் தெரிவிப்பதுடன், மன்னிப்பும் கோருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.



கறுப்பு ஜூலை தொடர்பில் உண்மையைக் கண்டறிந்து, ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்கும், எதிர்காலத்தில் இத்தகைய இன வன்முறைகள் மீண்டும் இடம்பெறாமல் தடுப்பதற்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமிக்கக் கோரும் தனியார் பிரேரணை மீதான விவாதத்தில் இன்று (09) உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.



இன, மத, சாதி, வர்க்க மற்றும் கட்சி வேறுபாடுகளைக் கடந்து, அனைவரும் இலங்கையர் என்ற அடையாளத்துடன் முற்போக்குத் தேசியவாதத்தின் அடிப்படையில் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என அவர் வலியுறுத்தினார். நாட்டைவிட்டு வெளியேறியுள்ள மக்களையும் நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தின் அடிப்படையில் தாய்நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறும் அழைப்பு விடுத்தார்.



மேலும், ஒற்றையாட்சி நாட்டுக்குள் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களுடன் முழுமையாக நடைமுறைப்படுத்துவது அவசியம் எனத் தெரிவித்த அவர், மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.



அதேவேளை, காணிகளை இழந்த மக்களுக்கு அவர்களது காணிகளை மீள வழங்குவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் எனவும், குறிப்பிட்ட காணிகளை வழங்க முடியாத சூழ்நிலையில் சந்தை மதிப்பீட்டுக்கு ஏற்ப நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.



இன வேறுபாடுகளைக் கடந்து இலங்கையர் என்ற அடையாளத்தையும் நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையையும் உறுதிப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் அவர் தனது உரையில் மேலும் குறிப்பிட்டார்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button