News

போராட்டம் நடத்தி வரும் தேரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி செயலாளர் வருகை

போராட்டம் நடத்தி வரும் தேரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி செயலாளர் வருகை 🔸

கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே வீதியில் அமர்ந்து போராட்டம் நடத்தி வரும் மகா சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க வருகை தந்துள்ளார்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள  கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ள பௌத்த பிக்குகள், அதிகாரிகளிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்கும் வரை தங்களால் அங்கிருந்து வெளியேற முடியாது என அறிவித்துள்ளனர்.

கடுமையான மழைக்கு மத்தியிலும் கொழும்பை வந்தடைந்த பிக்குகள், பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வரும் நிலையிலும் தமது போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button