பேச்சுவார்த்தை Fail – ஞானசார தேரரை விடுதலை செய்வதாக அரசாங்கம் அறிவிக்கும் வரை எங்களது போராட்டத்தை தொடர்வோம் – இங்கிருந்து போக மாட்டோம் என ஆர்பாட்டக்காரர்கள் அறிவிப்பு

புத்த பிக்குகள் கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சிறையிலடைக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி ஜனாதிபதி செயலக அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சாதகமான பதில் கிடைக்காததால், அவர்கள் அங்கிருந்து வெளியேற மறுத்துவிட்டனர்.
கைது செய்யப்பட்டுள்ள பிக்குவை விடுதலை செய்வதாக அரசாங்கம் அறிவிக்கும் வரை தங்களது போராட்டத்தை தொடரப் போவதாக பிக்குகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, போராட்டத்தில் ஈடுபட்ட பிக்குகளை சந்தித்து அவர்களின் கோரிக்கைகள் குறித்து ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக பேச்சுவார்த்தை நடத்தினார்.
இருப்பினும், இந்த விவகாரத்தில் முடிவெடுக்க குறைந்தது ஒரு மாதமாவது ஆகும் என்று ஜனாதிபதி செயலக அதிகாரிகள் தங்களுக்கு தெரிவித்ததாக போராட்டக்காரர்கள் கூறினர்.
அரசாங்கத்திடமிருந்து சாதகமான அறிவிப்பு வராமல் தங்களது போராட்டத்தை கைவிடப் போவதில்லை எனத் தெரிவித்த பிக்குகள், அதிகாரிகளின் பதிலில் அதிருப்தி வெளியிட்டனர்.
போராட்டக்காரர்கள் கனமழையையும் பொருட்படுத்தாமல் கொழும்பு வந்தடைந்ததோடு, ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த பேச்சுவார்த்தையின் முடிவு குறித்து ஜனாதிபதி செயலகத்தில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.



