News
கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யக் கோரும் விஹாரமகாதேவி பூங்கா போராட்டம் இன்று ஐந்தாம் நாளாக..

சிறையில் உள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யக் கோரி, தேரர்கள் தலைமையில் கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் முன்னெடுக்கப்படும் போராட்டம் இன்று (20) ஐந்தாவது நாளாகத் தொடர்கிறது.
இதன்போது, பிரித் பாராயணம் மற்றும் போதி பூஜை உள்ளிட்ட பல்வேறு சமய வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.
மேலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தேரர்களுக்கு ஆதரவாக மக்கள் தானம் வழங்கி வருகின்றனர்



