News

தெல்தெனிய தலைமைப் பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் சென்ற ஜீப் வண்டி மீது கல்வீச்சுத் தாக்குதல்

தெல்தெனிய தலைமைப் பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட பொலிஸ் குழுவினர், அம்பகோட்டே பகுதியில் போதைப்பொருளுடன் தொடர்புடைய இருவரைச் சந்தேகத்தின் பேரில் கைது செய்து பொலிஸ் ஜீப் வண்டியில் ஏற்றிக்கொண்டு திரும்பி வந்துகொண்டிருந்தபோது, அப்பகுதியிலுள்ள புதரில் மறைந்திருந்த குழுவொன்று ஜீப் வண்டி மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தியுள்ளது.

இத் தாக்குதலில் பொலிஸ் ஜீப் வண்டிக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

தெல்தெனிய தலைமைப் பிரதான பொலிஸ் பரிசோதகர் சந்திரபால உள்ளிட்ட குழுவினர், திங்கட்கிழமை (19) இரவுப் வேளையில் பயணித்துக் கொண்டிருந்தபோதே இக் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளைத் தெல்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button