News

அரபு கட்சிகளுடன் கூட்டணி இல்லை – நெதன்யாகு மற்றும் ஐசென்காட் முடிவு

இஸ்ரேலிய நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் காடி ஐசென்காட் ஆகிய இருவரும் அரபு கட்சிகளின் ஆதரவுடன் அரசாங்கம் அமைப்பதை பகிரங்கமாக மறுத்துள்ளனர்.

இதற்கிடையில், உறுதியான வெற்றியாளர் எவரும் இதுவரை பெயரிடப்படாத நிலையில், பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்தும் காபந்துப் பிரதமராகச் செயற்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று நிலவரப்படி 86 சதவீதமான வாக்குகள் எண்ணப்பட்டிருந்த நிலையில், இஸ்ரேலின் பிரதான மூன்று தொலைக்காட்சி அலைவரிசைகள் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, நெதன்யாகுவின் கட்சிக் கூட்டணிக்கு 120 இடங்களுக்கு 53 இடங்கள் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காடி ஐசென்காட்டின் தலைமையிலான எதிர்க்கட்சிக்கு 48 இடங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அரபு – இஸ்ரேலிய குடிமக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுக்கு சாதனை அளவாக 19 இடங்கள் கிடைக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

Recent Articles

Back to top button