News
நிறுத்தாமல் சென்ற முச்சக்கரவண்டி ஒன்றை இலக்கு வைத்து பொலிஸார் துப்பாக்கி சூடு – 16 வயது சிறுவன் காயம்
கடவத்தை பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்றை இலக்கு வைத்து பொலிஸார் இன்று (31) பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
பொலிஸாரின் சமிக்ஞையை மீறி குறித்த முச்சக்கரவண்டி பயணித்த நிலையில், இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது, 16 வயதுடைய சிறுவன் ஒருவர் காயமடைந்த நிலையில் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது



