News

ஐரோப்பிய நாடுகள் உட்படப் பல வளர்ந்த நாடுகள், தங்கள் நாட்டு மக்களுக்கு அவசரகாலத் தேவைக்கான உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் தொடர்பாடல் சாதனங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைச் சில நாட்களுக்காவது தாக்குப்பிடிக்கும் வகையில் முன்கூட்டியே தயாராக வைத்திருக்குமாறு அறிவுறுத்தி வருவது ஏன்?

✍🏻  Sharthar M M  Jameel

ஐரோப்பிய நாடுகள் உட்படப் பல வளர்ந்த நாடுகள், தங்கள் நாட்டு மக்களுக்கு அவசரகாலத் தேவைக்கான உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் தொடர்பாடல் சாதனங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைச் சில நாட்களுக்காவது தாக்குப்பிடிக்கும் வகையில் முன்கூட்டியே தயாராக வைத்திருக்குமாறு அறிவுறுத்தி வருகின்றன என்பதை அறிவீர்களா?

அப்படியானால், உலக ஒழுங்கையே உலுக்கக்கூடிய அந்த நிகழ்வு என்ன? என்ற குழப்பம் உலகச் செய்திகளை உன்னிப்பாகக் கவனித்து வருபவர்கள் மத்தியில் நிலவுகிறது.

அது ஒரு மிகப்பெரிய இணையத் தாக்குதலா? அணு ஆயுதத் தாக்குதலா? அல்லது ஏதேனும் இயற்கைப் பேரிடர் தொடர்பான முன் எச்சரிக்கையா? எனப் பலரும் பல்வேறு கேள்விகளுடன் குழப்பத்தில் உள்ளனர்.

எனது தனிப்பட்ட கணிப்பின்படி, மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் மற்றும் பதற்றமான சூழல், தற்போது உலகின் கடைக்கோடியில் வாழும் ஒரு சாதாரண மனிதனின் சமையலறை வரை தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கிவிட்டது.

இந்தப் பிரச்சினைக்கு ஒரு சுமுகமான தீர்வைக் காண்பதற்கோ அல்லது இராணுவ ரீதியாக ஒரு தீர்க்கமான நடவடிக்கையை மேற்கொள்வதற்கோ உயர்மட்ட அளவில் ஆலோசனைகள் நடைபெற்று வரக்கூடும் என்றே நான் கருதுகிறேன்.

அத்தகையதொரு திட்டம் அல்லது நடவடிக்கை, இஸ்ரேலின் உள்நாட்டு அரசியல் சூழல் மற்றும் தேர்தல் தொடர்பான இழுபறிகளால் சற்றுப் பிற்போடப்பட்டிருக்கலாம் என்பதும் எனது மற்றுமொரு அனுமானம்.

ஆனால், அத்தகையதொரு நடவடிக்கை இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறுகளை முற்றாக நிராகரித்துவிட முடியாது என்றே நான் நினைக்கிறேன்.

அவ்வாறு ஏதேனும் நிகழ்ந்தால், அதன் எதிர்விளைவுகள் உலகளாவிய ரீதியில் எவ்வாறான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பதை முன்கூட்டியே கணித்தே, பல்வேறு நாடுகள் இத்தகைய அவசரகால முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றனவோ என்ற கேள்வியும் எனக்குள் எழுகிறது.

நான் நினைப்பது சரியாகவும் இருக்கலாம்; தவறாகவும் இருக்கலாம். இவை அனைத்தும் எனது தனிப்பட்ட அவதானிப்புகளும் அனுமானங்களுமே தவிர, உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் அல்ல.

இருப்பினும், என் மனதில் தோன்றிய இந்தச் சிந்தனைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று தோன்றியது.

இது தொடர்பாக நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உலக நாடுகள் வழங்கிவரும் இந்த அவசரகால முன்னெச்சரிக்கைகளுக்குப் பின்னால் உண்மையில் என்ன காரணம் இருக்கலாம்? உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button