News

ஹம்பாந்தோட்டை துறைமுக வாகனத் தளத்தில் மின்னல் தாக்கியதில் இறக்குமதி செய்யப்பட்ட 11 வாகனங்கள் பலத்த சேதமடைந்தன

ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக வளாகத்தில் உள்ள வாகனத் தளத்தில் நேற்று (அக். 31) பலத்த மழையுடன் மின்னல் தாக்கியதில் தீ விபத்து ஏற்பட்டது.

இதில் இறக்குமதி செய்யப்பட்ட 11 வாகனங்கள் பலத்த சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இச்சம்பவத்தில் வாகனங்கள் அனைத்தும் கடுமையாகச் சேதமடைந்துள்ளதாகத் துறைமுகப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.


நேற்று இரவு 8.45 மணிக்கும் 9.00 மணிக்கும் இடைப்பட்ட வேளையில் மின்னல் தாக்கியதில், வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த தங்குதளப் பகுதியில் திடீரெனத் தீப் பற்றி எரிந்துள்ளது.


அதனையடுத்து, துறைமுகப் பாதுகாப்புப் பணியாளர்களும் அவசரக் கட்டுப்பாட்டுக் குழுவினரும் உடனடியாகச் செயற்பட்டுத் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.


பாதிக்கப்பட்ட வாகனங்களின் வகைகள் மற்றும் இதனால் ஏற்பட்ட மொத்த நிதி இழப்பு குறித்த விவரங்கள் இதுவரை துல்லியமாகக் கணக்கிடப்படவில்லை.


இச்சம்பவம் குறித்து ஹம்பாந்தோட்டைத் துறைமுகப் பொலிஸார் தீவிர விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button