News

பெளத்த துறவிகளின் காவி உடைகளை களைவதே இன்றைய அரசாங்கத்தின் மிக முக்கிய நடவடிக்கையாக மாறியுள்ளது – இது பெளத்த மதத்திற்கும் புத்த பெருமானுக்கும் செய்யப்பட்ட மிகப்பெரிய அவமதிப்பாகும் ; சஜித்

இன்றைய அரசாங்கத்தின் மிக முக்கிய நடவடிக்கையாக மாறியுள்ளது பிக்குமார்களின் ( பெளத்த துறவிகளின்)  காவி உடைகளை களைவதேயாகும். அன்றைய பிரேமதாச யுகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வது இல்லை என சஜித் பிரேமாதாச குற்றம் சாட்டி உள்ளார்.


நாடாகவும் ஒரு சமூகமாகவும் ஒற்றுமை, ஒருமைப்பாடு, சகோதரத்துவம், நல்லிணக்கம் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவை  (இலங்கை) குடிமக்கள் மத்தியில் உருவாகும் வகையில்தான் அன்றைய காலப்பகுதியில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.


இன்று புத்தசாசன அமைச்சின் கீழ் மற்றைய பிரிவுகள் அனைத்தும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன.

ஆனால் செய்யப்பட வேண்டியது என்னவென்றால், அன்று பிரேமதாச காலத்தில் இருந்தது போல புத்தசாசன அமைச்சு ஒரு அமைச்சரவை அமைச்சாக இருப்பதோடு, ஏனைய மதங்களுக்காக அரச அமைச்சுகள் உருவாக்கப்பட்டு, அந்த மதங்களுக்கும் உரிய கவுரவம் வழங்கும் திட்டங்களைச் செயற்படுத்துவதுதான் உண்மையிலேயே செய்யப்பட வேண்டும்.


அவை எதையுமே செய்யாமல், இன்றைய அரசாங்கத்தின் முதன்மையான நடவடிக்கையாக மாறியுள்ளது பிக்குமார்களின் ஆடைகளை களைவதாகும்.

இது நமது மதத்திற்கும், தர்மத்திற்கும், புத்த பெருமானுக்கும் செய்யப்பட்ட மிகப்பெரிய அவமதிப்பாகும். மிகப் பெரிய இகழ்ச்சியாகும்.


ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்திற்கு இந்த நடவடிக்கைகளைச் செயற்படுத்தும்போது, இதைவிடவும் மிகுந்த புரிதலுடனும், உணர்வுப்பூர்வமாகவும், கவனமாகவும் அரச கொள்கைகளைச் செயற்படுத்துவது மிக முக்கியமானதாகும் என்பதை மீண்டும் ஒருமுறை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button