VIDEO > அமெரிக்காவில் வீதியில் விழுந்து எரிந்த விமானம் – பயணம் செய்த 9 பேரும் உயிரிழப்பு

அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், கிரெஸ்ட்கேவன் பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதி வீதியில் லியர் ஜெட் 60 ரகத் தனியார் விமானம் ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 9 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Video : https://youtube.com/shorts/Z1PthLRjzCw?si=7NMVvL5BFH9AWQWR
Video 2: https://youtube.com/shorts/LRh_pbjDmQ0?si=2Rcji2I48vgoGZ_m
Video News : https://youtu.be/rnfYkKn39Xg?si=cIrCfkssMCRh7Th8
இந்த விமானம் டெக்சாஸில் இருந்து பஹாமாஸ் தீவுகளை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.இந்த விபத்து குறித்து அமெரிக்கப் போக்குவரத்துத்துறை செயலாளர் சீன் டஃபி சமூக வலைப்பதிலில் பதிவிட்டுள்ளதாவது:
‘ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:50 மணியளவில் (இலங்கை நேரப்படி இரவு 10:20 மணி) கிரெஸ்ட்கேவன் பகுதியில் இந்த விபத்து நேரிட்டது. இது ஒரு கொடூரமான பேரிடர்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.டெக்சாஸில் உள்ள ஒஸ்டின்-பெர்க்ஸ்டோம் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானம், பஹாமாஸில் உள்ள நோர்த் எலியூரா விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்ததாகக் கூட்டாட்சி விமானப் போக்குவரத்து நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
விமான விபத்துக்கான காரணத்தைக் கண்டறியும் வகையில் தேசியப் போக்குவரத்துப் பாதுகாப்பு சபை தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்


