News

இலங்கை ரூபாவுக்கு அடி மேல் அடி ; 2026 இன் முதல் 10 மாதங்களில் டொலருக்கு நிகராக ரூபா 6.8% சரிவு

2026 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களுக்குள் இலங்கை ரூபா அமெரிக்க டொலருக்கு எதிராக 6.8% பரிமாற்ற மதிப்பு வீழ்ச்சியைப் (மதிப்பிழப்பை) பதிவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் மாத முடிவில் அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் மதிப்பு 332.61 ரூபாவாகப் பதிவாகியிருந்தது.

இது 2025 ஆம் ஆண்டின் முடிவில் காணப்பட்ட 309.99 ரூபா மற்றும் 2026 செப்டம்பர் மாத முடிவில் காணப்பட்ட 330.83 ரூபா ஆகிய மதிப்புகளுடன் ஒப்பிடுகையில் ரூபா மேலும் பலவீனமடைந்துள்ளதைக் காட்டுகிறது.

மத்திய வங்கியின் செப்டம்பர் மாதச் செயற்பாட்டு அறிக்கையின்படி, 2026 செப்டம்பர் மாத முடிவில் ஆண்டின் இதுவரையான ரூபாவின் மதிப்பிழப்பு 6.3% ஆகப் பதிவாகியிருந்ததுடன், அக்டோபர் மாதத்தில் அது 6.8% ஆக மேலும் அதிகரித்துள்ளது.

சீன மக்கள் வங்கியுடன் (PBOC) உள்ள நாணய மாற்று வசதி (Swap facility) உட்பட, 2026 செப்டம்பர் மாத நிறைவின்படி இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ வெளிநாட்டு ஒதுக்கு நிதி மட்டம் 6.9 பில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளதாகவும் மத்திய வங்கி மேலும் குறிப்பிடுகிறது.

Recent Articles

Back to top button