வரி இல்லாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் 280 ரூபாய், டீசல் 336 ரூபாய்..

வெளிநாடுகளிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து உள்நாட்டில் சுத்திகரித்து விநியோகிக்கப்படும் டீசல் மற்றும் பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்ட சூத்திரம் மற்றும் அடிப்படைக் காரணங்களை இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் உடனடியாக நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க வலியுறுத்தியுள்ளார்.
கடந்த அக்டோபர் 30ஆம் திகதி நிலவரப்படி சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் பின்வருமாறு பதிவாகியுள்ளன:
• டீசல் ஒரு பீப்பாய்: 162 அமெரிக்க டாலர்கள் (இதன்படி சுத்திகரிக்கப்பட்ட டீசல் ஒரு லிட்டரின் அடிப்படை விலை 336 ரூபாவாகும்).
• ஆக்டேன் 92 பெட்ரோல் ஒரு பீப்பாய்: 138 அமெரிக்க டாலர்கள் (இதன்படி சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல் ஒரு லிட்டரின் அடிப்படை விலை 280 ரூபாவாகும்).
• ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்: 114 அமெரிக்க டாலர்கள்.
எனவே, கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து உள்நாட்டில் சுத்திகரிக்கப்படும் எரிபொருளுக்கு விதிக்கப்படும் வரிகள் மற்றும் விலை நிர்ணய முறைமை குறித்து தற்போதைய அரசாங்கம் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என அவர் கோரியுள்ளார்.



