உலக சந்தையில் காச்சா எண்ணெய் விலை 7 % சதவீதத்தினால் வீழ்ச்சி !!

உலக சந்தையில் மச்சா எண்ணெய் (கச்சா எண்ணெய்) விலைகள் 7 சதவீதத்திற்கும் அதிகமான தொகையால் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று மாத காலத்தில் பதிவான மிகப்பெரிய அளவிலான தினசரி விலை வீழ்ச்சி இதுவென வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் ஒன்றை எப்புவது தொடர்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விடுத்த அறிக்கையைத் தொடர்ந்தே இந்த விலை வீழ்ச்சி பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கமைய, சர்வதேச சந்தையில் பிரென்ட் (Brent) ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 7 சதவீதத்திற்கும் அதிகமான தொகையால் வீழ்ச்சியடைந்து, அமெரிக்க டொலர் 104.8 என்ற மட்டத்திற்கு வந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், அமெரிக்க சந்தையில் WTI ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலையும் டொலர் 96.73 என்ற மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது.



