News
மான் முட்டியதில் 30 வயது சிறைக் கைதி ஒருவர் உயிரிழப்பு

வீரவில காவல் துறை பிரிவில் உள்ள திறந்தவெளி சிறைச்சாலையில் புனர்வாழ்வு பெற்று வரும் கைதி ஒருவர், மான் ஒன்று முட்டியதன் காரணமாக நேற்றைய தினம் (08) மாலையில் உயிரிழந்துள்ளார்.
.
இந்தக் கைதி சிறைச்சாலை வளாகத்தில் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, அங்கு நடமாடிக்கொண்டிருந்த மான் ஒன்று அவரை முட்டியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்து, சிகிச்சைக்காக அவர் தேபரவெவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக வீரவில காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்துள்ள கைதி, 30 வயதுடைய வரப்பலான பகுதியைச் சேர்ந்தவராவார்.
சடலம் தேபரவெவ மருத்துவமனையின் பிரேதப் பரிசோதனைக் கூடத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்றைய தினம் (09) உடற்கூறாய்வுப் பரிசோதனை நடத்தப்படவுள்ளதாகக் காவல் துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.



