மத்திய வங்கி பிணைமுறி விவகார காலத்தில் சொகுசு வீடு ஒன்றை பெற்றுக்கொண்ட வழக்கில் இருந்து தம்மை விடுவிக்குமாறு கோரி ரவி கருணாநாயக்க தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் நிராகரித்தது

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் பர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் ஆகியோரை, ஊழல் குற்றச்சாட்ட வழக்கில் இருந்து விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
.
மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தின் போது, சொகுசு Apartment ஒன்றை வழங்கியமை மற்றும் அதனைப் பெற்றுக்கொண்டமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்களுக்கு எதிராக இந்த ஊழல் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
.
பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்குப் போதுமான சாட்சியங்களை முறைப்பாட்டாளர் தரப்பு சமர்ப்பித்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய பிரதி சொலிசிட்டர் ஜெனரல், பிரதிவாதிகளின் விடுதலைக் கோரிக்கைக்கு எவ்வித அடிப்படையுமில்லை என நீதிமன்றத்தில் வாதிட்டார்.
.
2016 ஆம் ஆண்டில் அன்றைய நிதியமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்க “மொனார்க் ரெசிடென்சிஸ்” வளாகத்தின் சொகுசு வீடு ஒன்றில் வசித்து வந்ததாகவும், அதற்கான 11.6 மில்லியன் ரூபாய் பணத்தை அர்ஜுன் அலோசியஸுக்குச் சொந்தமான நிறுவனம் செலுத்தியதாகவும் முறைப்பாட்டாளர் தரப்பு குற்றம் சுமத்தியுள்ளது.



