News
கஸ்ஸப தேரருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப் பட்டது.

திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று (11) ஆஜராகத் தவறியதைத் தொடர்ந்து, பாலங்கொட கஸ்ஸப தேரருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலைக் கடற்கரையோரத்தில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் அனுமதியற்ற கட்டுமானங்கள் மற்றும் சர்ச்சைக்குரிய புத்தர் சிலை தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இருப்பினும், வழக்கு விசாரணையின் போது கஸ்ஸப தேரர் அல்லது இவ்வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய நபர்களோ நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இதனைத் தொடர்ந்து, கஸ்ஸப தேரருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்த நீதிமன்றம், வழக்கின் விசாரணையை 2027 ஜனவரி 6ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.



