திறைசேரி, பணத்தால் நிரம்பி வழிகிறது என்றால்
மக்களுக்கு நிவாரணம் வழங்க பட்ஜெட் ஒன்று அவசியமா?

தற்போதைய அரசாங்கத்தினால் நாட்டின் 220 லட்சம் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், வாழ முடியாத சூழ்நிலை, பொருட்களின் விலை ஏற்றம், நாடு வளர்ச்சியடைவதற்கு பதிலாக வளர்ச்சிப் பணிகள் தடைப்பட்டுள்ளமை மற்றும் அரசாங்கம் ஜனநாயக உரிமைகளை மீறுவதற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி குரல் கொடுக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுத்தல் மற்றும் அரசுக்கு எதிரான பயங்கரவாதத்தைத் தடுத்தல் என்ற பெயரில் அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டு வந்து மக்களின் அடிப்படை மற்றும் மனித உரிமைகளை அரசாங்கம் மீறி வருகிறது என்றும், அத்துடன் மகா சங்கத்தினரை இழிவாக நடத்துவதுடன் ஒழுக்கமின்றி வெட்கக்கேடான முறையில் பாதுகாப்புப் படையினர் மகா சங்கத்தினருக்கும் காவி உடைக்கும் அவமரியாதை செய்வதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
.
இன்று (11) ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
.
ஒரு எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி மக்களுக்காகக் குரல் கொடுக்கும் என்றும், வறுமையை ஒழிப்பதுடன் நுண், சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழிலதிபர்கள், விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள் போன்ற மக்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தப் பாடுபடுவதாகவும் அவர் கூறினார். இன்று வைத்தியர்கள், பொறியியலாளர்கள் போன்ற தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், பாடசாலை மாணவர்கள் முதல் இலவச சுகாதாரச் சேவையின் பலனைப் பெறும் 220 லட்சம் மக்களும் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதால், மாற்று அரசாங்கமாக ஐக்கிய மக்கள் சக்தி இது குறித்து கவனம் செலுத்தி மக்களை துன்பத்திலிருந்து மீட்டெடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் அவர் இங்கு குறிப்பிட்டார்.
.
பட்ஜெட் மூலம் நிவாரணங்கள் வழங்கப்படுவதா இல்லையா என்பது ஜனாதிபதியின் தீர்மானம் என்றும், திறைசேரி பணத்தால் நிரம்பி வழியும் போது மக்களுக்கு நிவாரணம் வழங்க பட்ஜெட் ஒன்று வரவேண்டுமா என்று கேட்க வேண்டும் என்றும் அவர் இங்கு தெரிவித்தார்.
.
கடந்த காலத்தில் எரிபொருள் விலை அதிகரிப்பால் வாழ்க்கைச் சுமை அதிகரித்து, பணவீக்கம் உயர்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை சீர்குலைந்துள்ளதாகவும், ஒரு நபர் ஒரு மாதம் வாழ்வதற்கு 17,000-18,000 ரூபாய் போதுமானது என்று கூறுவது அறிவியல் ரீதியான தரவுகளை அடிப்படையாகக் கொண்ட கொள்கை உருவாக்கம் அல்ல என்றும், அரசாங்கத்திற்கு மக்கள் மீது எந்த அக்கறையும் இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
.
அதேபோல், அன்று தொழிலாளர்களுக்காகக் குரல் கொடுத்த ஜே.வி.பி யினர், இன்று மக்களிடம் இருந்து சந்தோசம் பெறும் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
.
அன்று பயங்கரவாதத்திலிருந்து அரசைக் காப்பாற்றும் சட்டங்கள் பயங்கரவாதத்தைத் தடுப்பதற்காகவே அறிமுகப்படுத்தப்பட்டன, ஆனால் இன்று பயங்கரவாதி யார் என்பதை வரையறுக்கும் உரிமையை நிறைவேற்று அதிகாரத்திற்கு வழங்கினால் அது பாதிப்பை ஏற்படுத்தும் என்று சர்வதேச நிறுவனங்கள் கூட சுட்டிக்காட்டியுள்ளன என்றும், இது ஒரு சர்வாதிகார ஒற்றைக் கட்சி ஆட்சியை நோக்கிச் செல்வதாகவும், இன்று நாட்டின் சிறு குழந்தைகள் கூட அரசாங்கத்தின் செயல்பாடுகளைப் பற்றி அறிந்து வைத்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்துள்ளார்.



