News

ஒரே மேடையில் சட்ட முதுமாணிப் பட்டம் பெற்ற தம்பதியினர்!

ஒரே மேடையில் சட்ட முதுமாணிப் பட்டம் பெற்ற தம்பதியினர்!
அன்மையில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கோலாகலமாக இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில்   சர்வதேச வணிகச் சட்டத்தில் ((LL.M in International Business Law) ) சட்ட முதுமாணிப் பட்டம் பெறும் பெருமையை ஒரே மேடையில் தம்பதியினரான கலாநிதி பரீக்டீன் ஹலால்தீன் மற்றும் திருமதி. நளீரா பரீக்டீன் தம்பதியினர் பெற்றுள்ளனர்.

ஏற்கனவே கலாநிதிக் கற்கையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள பரீக்டீன் ஹலால்தீன் அவர்கள் தனது மனைவிக்காகவே இந்த சட்ட முதுமாணிக் கற்கையை நிறைவு செய்துள்ளதாக தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

மாவட்ட நீதிபதியாக கடமையாற்றும் கலாநிதி.பரீக்டீன் ஹலால்தீன் அவர்களின் மூன்றாவது முதுமாணிப்பட்டமாகும். ஏற்றகவே சட்டத்துறையில் ஒரு முதுமாணிக் கற்கையையும் வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

திருமதி நளீரா பரிக்டீன் தனதுகலாநிதிக் கற்கையை வெற்றிகரமாக ஆரம்பிக்க பல்வேறு சமூக செயற்பாட்டாளர்கள் தமது முன்கூட்டிய வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்து வருகின்றார்கள்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button