வரவுசெலவுத் திட்டத்திற்கு எதிராக நாளை தேசிய எதிர்ப்பு தினம்

வரவுசெலவுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை (23) தேசிய எதிர்ப்பு தினமாகப் பிரகடனப்படுத்த அனைத்து அரச சேவை தொழிற்சங்கங்களும் தீர்மானித்துள்ளன.
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், சுகாதார உதவியாளர் குழாம் மற்றும் தாதியர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், அலுவலக உதவியாளர் குழாம், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், உள்ளூராட்சி மன்ற உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்தவர்கள் இதில் இணைந்துகொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் இதற்குப் பதிலளிக்கத் தவறினால், ‘அஸ்வெசும’, விவசாயக் கணக்கெடுப்புத் திட்டம் உள்ளிட்ட மேலதிக கடமைகளிலிருந்து விலகப் போவதாக சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.
கல்வித் துறையுடன் தொடர்புடைய பல தொழிற்சங்கங்களும் இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையில் இணைந்துகொள்ளவுள்ளன.
அத்துடன், தமது துறையின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் 30ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவும் ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.



