News
கணவனை திருகுவலை கட்டையால் தா**க்கி கொ*ன்ற மனைவிக்கு மேல் நீதிமன்றம் ம*ரண த*ண்டனை விதித்து தீர்ப்பளித்தது… (மனைவியுடன் கைதான ஒரு நபர் விடுதலை) #இலங்கை

யாழ்ப்பாணத்தில் கணவனை அடித்துக் கொலை செய்த மனைவிக்கு யாழ். மேல் நீதிமன்றம் நேற்று (25) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
2021ஆம் ஆண்டு அரியாலைப் பகுதியில் கணவனை திருகுவலை கட்டையால் தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மனைவியும் மற்றொரு நபரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், அரியாலை கிழக்கு பூம்புகார் பகுதியைச் சேர்ந்த செல்வக்குமார் சரண்யா குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை, வழக்கில் தொடர்புடைய மற்றைய நபர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.



